தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தின் முன்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

0

யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் முன்பாக இன்று சனிக்கிழமை மதியம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவை சேர்ந்த உறவினர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். போர் நடைபெற்று பத்தாண்டுகள் கடந்துள்ள போதிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை எனவும் , தமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இது தொடர்பில் அக்கறையில்லாது இருப்பதனை கண்டிக்கும் முகமாகவே தமிழரசு கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here