தலைப் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நாளை புதன்கிழமை நோன்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறை இன்று மாலை தென்பட்டது. நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

அதன்படி, புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!