முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 45ஆவது நினைவேந்தல்

ஈழத் தமிழரின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் மு.ப. 10 மணியளவில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார்.

அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது, சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் பொன். சிவகுமாரன் என்பது குறிப்படத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!