யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடம் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதினோராவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்று முதல் இயங்கவுள்ள இந்து கற்கைகள் பீடத்தின் பதில் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் கலைப் பீட, இந்து நாகரிகத்துறைத் தலைவர் திருமதி ஶ்ரீ. சுகந்தினி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியும், சிறப்பு விருந்தினர்களாக கலைப் பீடாதிபதி கலாநிதி எஸ். சுதாகர், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஏ. இபதுல் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி சிறப்பு அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 11ஆவது பீடமாக இயங்கவுள்ள இந்து கற்கைகள் பீடத்தில் இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் உள்வாங்கப்படவுள்ளன.

மிகப் பழமை வாய்ந்த இந்துப் பாரம்பரியத்தைக் கொண்டமைந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர். பொன். இராமநாதனின் கனவு இப்போதுதான் மெய்பட காலம் கனிந்துள்ளது என மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!