இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தவ்ஹீத் ஜமாத் எனக் கூறி பிக்குவிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரிய மூவரும் விளக்கமறியலில்

0
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1157

தம்மைத் தீவிரவாத தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் என அச்சுறுத்தி, தம்புள்ள ரஜமகா விகாரை மற்றும் அதன் பொறுப்பதிகாரி ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பௌத்த துறவியை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்துள்ளனர். அவர்கள் பணம் பறிக்க முயன்றுள்ளதுடன் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டையே அலைபேசி அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

சந்தேகநபர்கள் மூவரும் தம்புள்ள நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸ் தலைமையகம் மேற்காண்டு வருகின்றது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here