பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை இணையத்தில் பெற வசதி

கல்விப் பொதுதராதர உயர் தரம், சாதாரண தரம் உள்ளிட்ட அனைத்துப் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையதளம் ஊடாகப் பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் அறிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கல்விப் பொதுதராதர உயர் தரம், சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களை பிரதான தபாலகங்களில் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பரீட்சைகள் திணைக்களமும் தபால் திணைக்களமும் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பான வெளியீடு நாளைமறுதினம் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

அதற்கு மேலதிகமாக இணையத்திலும் பெறுபேற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்படவுள்ளது.

இதற்கான கண்டனத்தை பரீட்சாத்திகள் தமது கடனட்டை அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்திச் செலுத்த முடியும்.

அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்றுச்சீட்டு இலக்கத்துடன், இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதனையடுத்து, குறித்த சான்றிதழை விரைவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டிலுள்ள இலங்கைக் குடிமகன் பரீட்சை பெறுபேற்று சான்றிதழை ஒன்லைன் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பரீட்சாத்தி கொழும்பிலுள்ள பரீட்சைத் திணைக்களத்துக்கு வருகை தந்து சிரமப்படவேண்டிய தேவையேற்படாது” என்று பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!