மாவடிச் சந்தியிலுள்ள வெற்றிலைக் கடை தீயில் எரிந்து நாசம்

வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் உள்ள வெற்றிலைக் கடை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.
மாவடிச் சந்தியில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு தீப் பற்றி எரிந்தது.

மின்னிணைப்பு அற்ற அந்தப் பெட்டிக் கடைக்கு விசமிகளால் தீவைக்கப்பட்டதா அல்லது கடைக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக என்ற தகவல் கிடைக்கவில்லை.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!