கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.

இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக கமல் – கிரேஸி கூட்டணி இணைந்தது.

அதன்பிறகு இந்தக் கூட்டணி மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனப் பல படங்களில் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
கிரேஸி மோகனின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!