அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான அரச மருத்துவர்களின் போராட்டங்கள் தீவிரமடைகின்றன

சுகாதார, சுதேச வைத்தியத் துறை அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கிய துண்டறிக்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், அமைச்சர் ராஜிதவின் குடியுரிமையை இரத்துச் செய்யக்கோரும் சுவரொட்டிகள் நாடுமுழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தமாறும் வலியுறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் உரிய தரப்பினரிடத்தில் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

இருப்பினும் இது வரையில் தகுந்த நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் ராஜித சேனாரத்ன மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதனால், இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நளைய தினம், குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகமும், கவனயீர்ப்புப் போராட்டமும் இடம்பெறவுள்ளன.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!