இலங்கை – பங்களாதேஷ் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் போட்டி நாணயச்சுழற்சி போடப்படாமலேயே கைவிடப்பட்டது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன்மூலம் இலங்கை அணி 4 லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியடைந்ததுடன் இரண்டு போட்டிகளில் மழை காரணமாக ஆடாமல் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.

ஜசிசி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 16ஆவது லீக் போட்டி பிரிஸ்டாலில் இன்று நடைபெறவிருந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும் பிறகு குறைந்த ஓவர்களின் அடிப்படையில் இந்த ஆட்டம் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மைதானத்தில் காணப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக போட்டி இரத்துச் செய்யப்படுவதாக பிற்பகலில் போட்டி நடுவர் அறிவித்தார். அதனால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இலங்கை அணி 4 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வெற்றி கண்டும் 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகளும் என 4 புள்ளிகளைப் பெற்றது. பங்களாதேஷ் அணி 4 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வெற்றி கண்டு 2 புள்ளிகளுடனும் இன்றைய போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியைப் பெற்றும் 3 புள்ளிகளுடன் உள்ளது.

மழையால் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டதால் இலங்கை அணி இனிவரும் 5 லீக் ஆட்டங்களில் வெற்றிபெறவேண்டும் என்ற அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் நிலை தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் தனது அதிருப்தியை ஐசிசிக்கு வெளியிட்டுள்ளது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இன்றைய 16ஆவது லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!