ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை – ரணில் கடும் அதிருப்தி

“சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருத்தல் வேண்டும்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முஸ்லிம்கள், இலங்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலம் உலகில் பெரும்பான்மையானவர்கள் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். காத்தான்குடி பள்ளிவாசலில் கடந்த வாரம் இடம்பெற்ற தொழுகையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்துத் தொடர்பிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அதிருப்தியை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற கோரிக்கையுடன் சிவில் அமைப்புகள் சில இன்று காலை பிரதமரை சந்தித்தது.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை

அதேபோன்று நாடாளுமன்றத்தினதும் பொது மக்களினதும் இறைமையை பாதுகாப்பதற்கும் நாம் செயற்படுகின்றோம்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!