ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் சிக்கினர் – இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியா, கோவையைச் சேர்ந்த 6 பேருக்கு எதிராக அந்த நாட்டு தேசிய புலனாய்வுப் பிரிவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இலங்கையை இந்தியா எச்சரித்தது. ஆனால் இலங்கை அலட்சியமாக இருந்ததால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தகவல் வெளியாகியது.

கேரளாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற 20-க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று கோவையை சேர்ந்தவர்களும் பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் பரப்புரையால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் கோவையில் 7 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் சோதனை மேற்கொண்ட போது 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்ட்கள், 10 பென் டிரைவ்கள், 3 லப் டப்கள், 6 மெமரி கார்ட்கள், 4 ஹார்ட்டிஸ்க், துண்டறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் கோவை மற்றும் கேரளாவில் ஐ.எஸ். ஆதரவாளர்களின் செயல்பாட்டை தேசிய புலனாய்வு பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கை தாக்குதலை அடுத்து அதிரடி சோதனையில் 6 பேருக்கு இலங்கை தாக்குதலில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை தேசிய புலனாய்வு பிரிவு விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கும் என தெரிகிறது. மேலும் சிலருக்கு அழைப்பாணை விடுக்கவும் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!