எமது சமூகம் ஆரோக்கியமாக வாழ இயற்கை விவசாயம் அவசியம் – அருட்தந்தை லிங்கேஸ்வரன் செவ்வி

மீண்டும் பழமையைக் கொண்டுவரவேண்டும், இன்றுள்ள சந்ததியும் எதிர்கால சந்ததியும் நீண்ட ஆயுளுடன் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தினால் இயற்கை விவசாயத்தை வீட்டுத்தோட்டமாக செய்துவருகின்றேன் என்கிறார் அருட்தந்தை ஜோண் லிங்கேஸ்வரன்

வீட்டுக் காணியில் இயற்கை விவசாயம் செய்து தனது குடும்பத்தினருக்கு மாத்திரமின்றி உறவினர்கள் – அயலவர்கள் என தன்னைச் சூழவுள்ள சமூகம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுகின்றார் உடுவில் மகளிர் கல்லுரியின் ஆசிரியரான அருட்தந்தை சேமநாதன் ஜோண் லிங்கேஸ்வரன்.

காணொளியைத் தவறவிடாதீர்கள்


தனது தந்தையுடன் இணைந்து கடந்த 3 வருடகாலமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரது துணைவியார் சியாமிளா லிங்கேஸ்வரன் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றி வருவதுடன் வீட்டுப் பொறுப்புக்களுடன் கணவருடன் இணைந்து இயற்கை விவசாயத்தையும் முன்னெடுக்கிறார்.


தனது இயற்கை விவசாயம் தொடர்பிலும் சமுகத்துக்கு தான் கூற விரும்புவதையும் அருட்தந்தை ஜோண் லிங்கேஸ்வரன் முதல்வனுடன் பகிர்ந்தார். அவர் தெரிவித்ததாவது:


எனது தந்தை பரம்பரை விவசாயி. அவரது வழியில் நானும் பயணிக்கவேண்டும் என்பது எனது அவா. எனினும் எனது கல்வி, பணிவாழ்வு பல இடங்களைக் கொண்டதால் உடனடியாக செயற்படுத்த முடியாத நிலையில் இருந்தது.


அந்தச் சூழ்நிலைகளைப் பாராது நாம் இருக்கும் சுழலை எமக்கானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மானிப்பாயில் உள்ள எமது இல்லத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைக்க எண்ணினேன் – செயற்படுத்தினேன்.


இன்றைய சுழல் பல்தேசிய நிறுவனங்களின் கொள்கைகள் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிலையே காணப்படுகின்றது. இந்த நிலை விவசாயத்திலும் வேருன்றியுள்ளது. பல்தேசிய ஆதிக்கம் எங்களுக்குரித்தான அனைத்துவிதமான செயற்பாடுகளையும் தகர்தொறிந்து தமது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.


இந்த நிலையானது எமது பாரம்பரிய இனங்கள் அனைத்தையும் இல்லாது செய்துள்ளது. புதிய இனங்களின் வருகை என்பது அழகையும் கவர்சியையும் கொண்டதாக இருந்தமையால் அனைவராலும் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனுடைய தாக்கத்தையாரும் உணரவில்லை.


இயல்பாகவே எமது மண் வளம் கொண்டதாக இருந்தது. ஆனால் புதிய இன பயிர்களை நட்டமையால் எமது மண்வளம் பாதிப்புக்குள்ளாகியது. பயிர்கள் மரங்கள் கூட மந்தமான வளர்ச்சியால் இன்றைய விவசாயத்திற்கு செயற்கைப் பசளை, பூச்சி மருந்து, களைக் கொல்லி, வேர்பூச்சி கொல்லி என்று செயற்கை கிருமிநாசினிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை மறந்துவிட்டோம்.


இதன்காரணமாக பல்வேறு வகையான நோய்கள் எம்மை தாக்கத்தொடங்கியள்ளன. வளமைக்கு மாறான பயன்பாட்டின் செயற்பாடுகளின் தாக்கத்தை அறிய முடியாதவர்களாக இருந்த நாம் பல்வறு நோய்களுக்குள்ளாகி எமது ஆயுளை இழக்கத்தொடங்கினோம்.


எமது இயல்வான வாழ்க்கைய மாறி கவர்சிகரமான வாழ்க்கைக்குள் சென்றுவிட்டோம். இந்த மாற்றம் கவர்சியுள்ளதாக இருந்துள்ளதே தவிர ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. ஆரோக்கியம் மட்டுமன்றி எமது பயன்பாட்டிற்குரிய பாரம்பரியமான எமது இனப் பயிர்களை இல்லாது செய்துவிட்டது.


எமது பாரம்பரிய முறைகள் எமது முதாதையர்களின் பழக்கவழங்கங்களை பின்பற்றியிருப்போமானால் எம்மை இத்தகைய நோய்கள் அண்டியிருக்காது. தற்போது ஆரோக்கியமற்ற சுழல், தரமற்ற உணவுகள், புதிய வியாபார அணுகுமுறைகள் எம்மை சுழ்ந்துள்ளன. இவை எம்மை இன்னும் பின்தள்ளிய நிலையிலே வைத்துள்ளன.

இவற்றுக்கு மாற்றம் தேவை. மாற்றம் தேவை என்று கூறிக்கொண்டிருந்தால் மாற்றத்தை அடைய முடியாது. எமது சமுதாயத்தில் விவசாயம் அல்லது வீட்டுத்தோட்டம் என்றால் வறுமை நிலையில் உள்ளவர்கள், கல்வியறிவு குறைந்தவர்கள்தான் செய்கிறார்கள் என்ற தப்பான எண்ணமும் உள்ளது. இந்த மனநிலையிலும் மாற்றம் தேவை. இவ்வாறான சுழல்தான் எமது பரம்பரையாக செய்துவந்த விவசாயத்தை நான் இருக்கும் இடத்திற்கேற்ப வீட்டுத்தோட்டமாக செய்து வருகின்றேன்.


மீண்டும் பழமையைக் கொண்டுவரவேண்டும். இன்றுள்ள சந்ததி எதிர்கால சந்ததி நீண்ட ஆயுளுடன் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த முயற்சிகளை செய்துவருகின்றேன்.


எனது தந்தைக்கு வயது 82. இன்றும் ஆரோக்கியத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார். எனக்கு உதவியாக எவ்வாறான இனங்களை பயிரிடலாம், எத்தகைய நோய்கள் தாக்கும் என்கின்ற ஆலோசனைகளை கூறி, அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றார்.


வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய காய்கறி செடிகள், கீரை வகைகள் மூலிகைச் செடிகள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவ்வாறாக எனது தோட்டத்தில் கத்தரி, வெண்டி, மிளகாய், பாகல், பூசணி, அவரை, கத்தாளை, பிரண்டை போன்றவை தற்போது உள்ளன. அடுத்த கட்டமாக எமது மண்ணுக்குரிய பாரம்பரிய இனங்களை தேடி இவற்ரை நாட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.


என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வோரு குடும்பங்களும் தமது இல்லத்தில் வீட்டுத் தோட்டத்தை செய்வார்களேயானால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். சமுதாயத்தில் சமுகப் பொறுப்பில் உள்ளவர்கள் முன்மாதிரியான செயற்பாடாக இதனை செய்வார்களானால் மாற்றத்தை கொண்டுவரலாம்.


வியாபாரிகள் இலாபத்தை நோக்கமாக்க் கொண்டவர்கள். அவர்களையும் இந்த மாற்ரத்தை நோக்கி கோண்டுவரவேண்டும். இதற்கு .இயற்கை முறையில் செய்யப்பட்ட உற்பத்திகளுக்கான சந்தைகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இயற்கை உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன்தேவைகள் உணரப்படும் அப்போது ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். இதற்காக எனது முயற்சிகள் தொடந்து கொண்டிருக்கும் – என்கிறார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!