ஒன்லைனில் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகளுடன் இணையத்தளம் புதுப்பொழிவு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பரீட்சைகளின் பெறுபேறுகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளவது உள்ளிட்ட பல வசதிகளைத் தாங்கியவாறு பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளம் புதுப்பொழிவு பெற்றுள்ளது.

இணையம் மூலம் விண்ணப்பிப்பதன் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை வீட்டுக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு 2001ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், நடைபெற்ற பரீட்சைகளின் வினாத்தாள்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்டவையும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!