பெண்கள் மென்பந்து கிரிக்கட் போட்டி – வடமாகாண சம்பியனானது அனலைதீவு சதாசிவ ம.வி

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து கிரிக்கட் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அணி வெற்றிபெற்று சம்பியனானது.

கிளிநொச்சி சென்.திரேசா மகளிர் கல்லூரியில் நேற்று (12) புதன்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தா அணியை எதிர்கொண்டு விளையாடிய அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மகளிர் அணியினர் போட்டியில் வெற்றிபெற்று வடமாகாண சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அதிபர் நா.இராதாகிருஷ்ணன, “இப்போட்டியில் வெற்றிபெற்று வடமாகாண சாம்பியன் ஆகிய நாங்கள், தேசிய ரீதியிலும் வெற்றிபெறுவோம். அதற்கான சகல உதவிகளையும் எமது மாணவிகளுக்கு பெற்றுக்கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!