ஓஎல், ஸ்கொலர்ஷிப் பெறுபேற்றின் தேசிய தரப்படுத்தல் இனி வெளியாகாது

0
21

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை என்பவற்றின் தேசிய மட்ட தரப்படுத்தல் முடிவுகள் இனி வெளிப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

“தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை என்பவற்றின் தேசிய மட்ட தரப்படுத்தல் (Island Best Rank) இனிவரும் காலங்களில் வெளியிடப்படமாட்டாது.

அதனூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மனத்தாக்கத்தைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது” கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாவட்ட நிலை தரப்படுத்தல்கள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.