விபத்தில் சிக்கிய இளைஞர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – அடையாளம் தெரியவில்லை என அறிவிப்பு

0
24

விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் அவர் தொடர்பான மேலதிக விவரங்கள் அறிய முடியவில்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

“விபத்தில் படுகாயமடைந்த நிலையில் 19 வயதுடைய இளைஞர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர், தகவல் எதனையும் வழங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

படுகாயமடைந்த இளைஞர், முழுமையான சுயநினைவற்ற நிலையில் தனது பெயரை மித்திரன் எனத் தெரிவித்துள்ளார். அவர் சத்திரசிகிச்சைக்காக சத்திரசிகிச்சை கூடத்துக்குக் கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.

அதனால் அவரது சடலம் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் இளைஞர் தொடர்பான விவரங்களோ அல்லது விபத்துத் தொடர்பான விவரங்களோ அறியக்கிடைக்கவில்லை” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.