ஊரடங்கு வேளை அரேபியர்களை சந்திப்பு – ஹிஸ்புல்லாவிடம் 8 மணி நேரம் விசாரணை

0
14

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், எட்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இன்று காலை 9.45 மணிக்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையான அவர், இன்று மாலை 5.30 மணியளவிலேயே விசாரணை முடிந்து அங்கிருந்து வெளியேறினார்.

அவரிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மறுநாள் 22ஆம் திகதி, இரவு 10 மணியளவில், ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த போது பாசிக்குடாவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இரண்டு அரேபியர்களை சர்ச்சைக்குரிய வகையில் சந்தித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவே ஹிஸ்புல்லாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.