அச்சுவேலி – மூளாய் இடையே 30 வருடங்களின் பின் மினி பஸ் சேவை ஆரம்பம்

0
16

அச்சுவேலி- மூளாய் இடையிலான சிற்றூர்தி (மினி பஸ்) சேவை 30 வருடங்களின் பின்னா் இன்று ஞாயிற்றுக்கிழமை மீள ஆரம்பமானது.

நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் இந்தச் சேவை இன்று காலை 9 மணிக்கு சம்பிரதாய பூா்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

30 வருடங்களின் பின்னா் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் மிக நீண்டதுாரம் பயணம் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

“புதிய அரசினை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள் தற்போது தேர்தல் வரும் போது அரசு ஏமாற்றிவிட்டது என கூற முற்பட்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் மக்கள் தலைவர்களைத் தெரிவு செய்து எவ்வாறான ஏமாற்றங்களை பெற்றுக்கொண்டனர் என்பதை உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். நான் ஒருபோதும் அரசு ஏமாற்றிவிட்டது என கூறப்போவதில்லை.

எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால் நான் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை தீர்த்து வைப்பேன். இப்பகுதி மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் 30 வருடங்களின் பின்னர் அச்சுவேலி, மூளாய்கு இடையிலான சிற்றூர்தி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.