மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்கத் தயாராகும் முஸ்லிம் எம்.பிக்கள்

0
28

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொண்ட ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், தமது பதவிகளை ஏற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இது தொடர்பான சிறப்புக் கூட்டம், நடத்தப்படவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு, மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் நிலமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, வழமை நிலை திரும்பியுள்ள நிலையில், இந்த கோரிக்கையை தாம் கருத்தில் கொள்ளவுள்ளதாகவும், ஹலீம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பதவியை விட்டு விலகிய அனைத்து அமைச்சர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.