யாழ். மத்திய பஸ் நிலைய பொது மலசல கூடம் இரவில் மூடப்படுவது ஏன்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மாநகரத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சீரமைக்கப்பட்ட பொது மலசல கூடம் மக்களின் தேவைக்கானதா அல்லது தனிப்பட்ட தேவைக்கானதா?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடம் தினமும் இரவு வேளைகளில் மூடப்படுகிறது. இதனால் வெளி மாகாணங்களிலிருந்து வருவோர் உள்பட பலர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

jaffna-ctb

Image 1 of 4

இந்தப் பொது மலசல கூடம் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சால் ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபா செலவிடப்பட்டு சீரமைக்கப்பட்டது.

இவ்வளவு நிதியில் கட்டப்பட்ட இந்த மல சல கூடமானது மக்களின் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. தற்ப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டின் டிப்போக்கள் 24 மணி நேரமும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மக்களுக்கான மகத்தான சேவையை வழங்கி வருகின்றது.

வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்தும் அதிகளவிலான மக்கள் இந்த பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் பேருந்து நிலையத்தில் காணப்படுகின்ற மலசலகூடமானது தினமும் இரவு நேரங்களில் மூடப்படுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயத்திற்கான உரிய தீர்வை வழங்க அதிகாரிகளோ அல்லது இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய நிர்வாகமோ நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

பொதுமகன்

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!