விராட் கோலி புதிய உலக சாதனை

0
22

இந்திய அணித் தலைவர் விராட் கோலி, ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 11 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில், 57 ஓட்டங்களை கடந்த இந்திய அணித் தலைவர் விராட் கோலி, ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 11 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

இவர், 222 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன், இந்தச் சாதனை இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் (276 இன்னிங்ஸ்) வசம் இருந்தது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (286 இன்னிங்ஸ்), இந்தியாவின் கங்குலி (288 இன்னிங்ஸ்) உள்ளனர்.

ஒன்பதாவது வீரர்

ஒருநாள் அரங்கில் 11 ஆயிரம் ரன்களை எட்டிய 9வது வீரரானார் கோலி. இதுவரை இவர், 230 போட்டியில், 41 சதம், 51 அரைசதம் உள்பட 11,020 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (18,426 ஓட்டங்கள்), இலங்கையின் சங்ககரா (14,234), ஆஸ்திரேலியாவின் பொண்டிங் (13,704), இலங்கையின் ஜெயசூர்யா (13,430), மகேல ஜெயவர்தன (12,650), பாகிஸ்தானின் இன்சமாம் (11,739), தென்னாபிரிக்காவின் கலிஸ் (11,579), இந்தியாவின் கங்குலி (11,363) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.