இந்தியா – பாகிஸ்தான் விறுவிறு மோதல் இன்று

0
18

இந்தியா, பாகிஸ்தான் மோதல் இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இரு ஆண்டுக்குப் பின் இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்த்த ஏற்படுத்தியுள்ளது. இதில் வழக்கம் போல இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை தொடரும் என நம்பப்படுகிறது.

இங்கிலாந்தில் 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ரோபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘முதல்–4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று மான்செஸ்டர், ஓல்டுடிரபோர்ட் மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகள் என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக் கிண்ணத் தொடரை பொறுத்தவரையில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 6 போட்டிகளிலும் இந்தியாதான் வெற்றி பெற்றது.

முதல் 3 போட்டியில் 2 வெற்றி பெற்ற இந்தியாவின் (1 கைவிடப்பட்டது) ஷிகர் தவான் இடது கை பெருவிரல் காயத்தால் அவதிப்படுவதால் ரோகித் சர்மாவுடன் (2 போட்டி, 179 ஓட்டங்கள்) இணைந்து லோகேஷ் ராகுல் (ஆரம்ப சராசரி 56.00 ஓட்டங்கள்) நல்ல ஆரம்பம் தர வேண்டும்.

மீண்டும் ‘நான்கு’

மத்திய வரிசையில் 3வதாக அணித்தலைவர் கோலி வரவுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 12 போட்டிகளில் 2 சதம் அடித்த கோலி, மீண்டும் அசத்தினால் நல்லது.

உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்காக 4வது இடத்தில் களமிறங்கப் போவது யார் என பெரும் குழப்பம் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் லோகேஷ் ராகுல் விளையாடிய நிலையில், இன்று இவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் என இருவரில் ஒருவர் வரலாம் எனத் தெரிகிறது.

அடுத்து விக்கெட் காப்பாளர் தோனி, அனுபவ ஆட்டத்தை கொடுக்க காத்திருக்கிறார். 2017 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிரடியாக 76 ஓட்டங்கள் (43 பந்து) விளாசிய பாண்ட்யா, இன்றும் கைகொடுக்க வேண்டும்.

பும்ரா நம்பிக்கை

வேகப்பந்து வீச்சில் இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமார், பும்ரா என இருவரும் நம்பிக்கை தரலாம். இரு போட்டிகளில் தலா 5 விக்கெட் சாய்த்த இந்த கூட்டணி, எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க காத்திருக்கிறது. சுழலில் இதுவரை 6 விக்கெட் சாய்த்த சகால், மீண்டும் சாதிப்பார் எனத் தெரிகிறது. இவரது ‘சகா’ குல்தீப் (1 விக்.,) இன்னும் ‘போர்முக்கு’ திரும்பாதது பின்னடைவு தான். எனிலும் ‘மிடில் ஓவர்களில்’ இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது பலம்.

சிக்கலில் பாக்.,

பாகிஸ்தான் அணி 4 போட்டியில் 1ல் மட்டும் வென்றது. 2 போட்டியில் தோற்றது. 1 போட்டி கைவிடப்பட்டது. இதனால் இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆரம்ப வீரர்கள் பகர் ஜமான் (58), இமாம் உல் ஹக் (99) அணிக்கு சிறப்பான ஆரம்பம் தரவில்லை. மத்திய வரிசையில் பாபர் அசாம் (115 ஓட்டங்கள்), முகமது ஹபீஸ் (146 ஓட்டங்கள்) பலம் சேர்க்கின்றனர்.

பின் வரிசையில் அணித்தலைவர் சர்பராஸ் இருந்தாலும் பெரியளவில் சோபிக்கவில்லை. மூத்த வீரர்கள் சோயப் மலிக் (2ல் 8 ஓட்டங்கள்) துடுப்பாட்டம் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான இவரது கடைசி 17 போட்டியில் ஒருமுறை தவிர, மற்ற போட்டிகளில் இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்துள்ளதால், இன்று மீண்டு வரலாம்.

பந்துவீச்சுப் பலம்

பந்துவீச்சில் எதிர்பார்த்தபடியே முகமது அமிர் பிரகாசிக்கிறார். இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய இவருக்கு, மூத்த வீரர் வகாப் ரியாஸ் (4 விக்.,) நன்கு கைகொடுக்கிறார். ஷகீன் அப்ரிடி, ஹசன் அலியும் அணியில் உள்ளனர். சுழலைப் பொறுத்தவரையில் ஷாதப் கானுடன் (2 விக்.,), சோயப் மலிக், முகமது ஹபீசும் பந்தை சுழற்றலாம்.

இந்தியா வெற்றிக்கு சிறப்பு வழிபாடு

இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி பெறுதற்கு உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடுகளை நடத்தினர்.

இந்தப்போட்டியில், இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

இதே போன்று இந்தியா முழுவதும் 100 இடங்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில் ஆறடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக ஏற்கனவே வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 11 அன்று, ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வெற்றி ஜோதியை ஏற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
இப்படி நாடெங்கிலும், இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்லவும், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறவும் யாகம், தீபம், ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.