இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் அனுஷ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் கரையோரத்துக்கு அப்பால், இன்று காலை 7.5 றிச்டர் அளவுள்ள நில அதிர்வு ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 220 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.

இந்த நில அதிர்வினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பசுபிக் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நில அதிர்வு இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் தலைநகர் திலி மற்றும் பாலி தீவு ஆகிய இடங்களிலும், உணரப்பட்டது. உடனடி சேத விவரங்கள் வெளியாகவில்லை.

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!