உயர்தர மாணவர்களுக்கு மிகவிரைவில் டப் கணிணிகள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

0

கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரலாற்றில் வெற்றியை நிலை நிறுத்தி உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு டப் (Tab) கணினிகளை பெற்றுக்கொடுக்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு இன்று அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

“இது கல்வி துறையில் உன்னதமான வெற்றியாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் இது சிறப்பான வெற்றியாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு இதன் மூலமான கல்வி நடவடிக்கைகளுக்கு ஒரு இலட்சம் டப் கணினிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூடிய விரைவில் பாடசாலை கட்டமைப்பில் இந்த டப் கணினி விநியோகிப்பதற்கும் அதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here