நல்லை கலாமந்திர் நடத்திய சதங்கை நாதம் நடன ஆற்றுகை

யாழ் நல்லை கலாமந்திர் நடனப்பள்ளி நடத்திய சதங்கை நாதம் 2019 என்ற நடன ஆற்றுகை நிகழ்வு 23. 06. 2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இசைத் துறை தலைவர் கலாநிதி தட்சணாமூர்த்தி பிரதீபனும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் நாட்டியக்கலை மணி யசோதரா விவேகானந்தன் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி முன்னாள் நடன பாட ஆசிரியர் வசந்தி குஞ்சிதபாதம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அதிபர் லுடேவிக்கா மகேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அணிசேர் இசைக்கலைஞர்களாக பாட்டு தவநாதன் ரொபேட் மற்றும் வதனா திருநாவுக்கரசு மிருதங்கம் சின்னையா துரைராசா வயலின் அம்பலவாணர் ஜெயராமன் தபேலா வெ.இரட்ணபிரபாகர சர்மா ஆகியோர் பங்கு கொண்டனர்.

நடன ஆற்றுகைகளில் 135 மாணவர்கள் பங்கு கொண்டனர். இவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய நல்லை கலாமந்திர் இயக்குனர் அனுஷாந்தி சுகிர்தராஜ் கலைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர். யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் நடன பாட ஆசிரியராக கடமையாற்றுகிறார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!