“சகவாழ்வு – ஓர் உரையாடல்” கருத்தமர்வு

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினால் “சகவாழ்வு – ஓர் உரையாடல்” என்ற கருப்பொருளில் நாளைமறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல், குறுந்திரைப்படங்களின் காட்சிப்படுத்தலும் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் தயானி யோகநாதனின் “முஸ்லிம் தெருவழியே,” ஏ. எம். அஷ்ஃபாக், தயானி யோகநாதன் மற்றும் கமிலாகலீல் ஆகியோரின் இணைந்த படைப்பான “அபாயா,” கேஷாயினி எட்மன்டின் “ஹர்த்தால்” மற்றும் கமிலாகலீலின் “ஃபேக் ஐடி பார்த்துக்கொண்டிருக்கிறான்” ஆகிய குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.

குறுந்திரைப்படங்களின் காட்சி நிகழ்வுக்கும், அதனை அடுத்து நடைபெறும் உரையாடலுக்கும் சிறகு நுனி என்ற அமைப்பினர் அனுசரணையாளராக இருப்பர். இது ஒரு திறந்த நிகழ்வாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) அன்று இடம்பெற இருக்கும் முழுநாள் கருத்துப்பகிர்வுகளிலும், உரையாடல்களிலும் கலந்துகொள்ள விரும்புவோரினை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடன் மின் அஞ்சல் மூலம் (coexistencejaffna@gmail.com) தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தென்னிலங்கை மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் சமயத் தலைவர்கள் பங்குபற்றுவர் என சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!