முடங்கிய வட்ஸ்அப், பேஸ்புக்: ட்விட்டர் பக்கம் குவிந்த பயனாளர்கள்

0

சமூக வலைதளங்களான வட்ஸ் அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படம் மற்றும் காணொலிகளைப் பார்வையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியாக வட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை உள்ளன.

சமூக வலைதளங்களான வட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படம் மற்றும் காணொலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த செயலிகளிலிருந்து ஒளிப்படம் மற்றும் காணொலி போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா கண்டங்களில் ஏற்பட்ட பிரச்சினை ஆசியாவுக்கும் விரிவடைந்தது. இலங்கையில் வட்ஸ் அப் பயனாளர்கள் படங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளனர். இதேபோல குரல் தகவல்களையும் அனுப்ப முடியவில்லை.

முக்கியமான மூன்று சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்தப் பிரச்சினை சில மணி நேரங்களில் முடிவுக்கு வரும் என்று முகநூல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here