ஊடகவியலாளர் வித்தியின் 60ஆவது பிறந்த நாள் நிகழ்வில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரனின் 60ஆவது அகவை நிறைவு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர் பலர் பங்கேற்றனர்.

அகவை அறுபதை நிறைவு செய்யும் ஊடகவியலாளர் வித்தியாதரனுடன் மகிழ்வான மாலைப் பொழுதில் ஒரு சந்திப்பு நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை (ஜூலை 4) இடம்பெற்றது. ஊடகவியலாளர்கள் வட்டம் என்ற குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் அரசியல் தலைவர் சூழ மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், அங்கஜன் இராமநாதன், மேல் மாகாண ஆளுநர், ஊடகவியலாளர்கள், ஊடகப் பிரதானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!