நாளை ஓய்வு பெறுகிறார் தாகிர்

“ஒரு அணியாக நல்ல விதமாக முடிக்க எண்ணுகிறோம். ஆனால் நான் அணியில் இருந்து விடைபெறுவதை நினைத்தால் மிகுந்த வருத்தமாகவும் உருக்கமாகவும் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. அணியில் இருந்து வெளியேறுவது கடினமாக இருந்தாலும் அதற்காக என்னை தயார்ப்படுத்தியாக வேண்டும்” என்று தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைகிறது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிப்பெற்றன.

இதில் லீக் சுற்றுடன் வெளியேறும் தென்னாபிரிக்க அணியில் ‘சுழல்’ வீரர் இம்ரான் தாகிர், இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். இதனால், நாளை ஆஸ்திரேலியா உடனான போட்டியே தாகிரின் கடைசி போட்டியாக அமையவுள்ளது.

பாகிஸ்தானில் பிறந்த இம்ரான் தாகிர் (வயது 40), தென்னாபிரிக்காவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே குடியேறினார். தனது 31வது வயதில் 2011 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான தாகிர், இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 172 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஷ

ஒருநாள் போட்டியில் ஐசிசி பந்துவீச்சுத் தரவரிசையில் 4வது இடம் வகிக்கும் தாகிருக்கு தனது கடைசி உலகக் கிண்ணத் தொடர் ஏமாற்றமாக அமைந்தது. தென்னாபிரிக்க அணி 5 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாபிரிக்க அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இதுகுறித்து இம்ரான் தாகிர் தெரிவித்ததாவது:

ஒரு அணியாக நல்ல விதமாக முடிக்க எண்ணுகிறோம். ஆனால் நான் அணியில் இருந்து விடைபெறுவதை நினைத்தால் மிகுந்த வருத்தமாகவும் உருக்கமாகவும் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. எப்போதும் கிரிக்கெட் விளையாட நினைத்தாலும் ஓய்வு பெற இதுவே சரியான நேரம்.

அணியில் இருந்து வெளியேறுவது கடினமாக இருந்தாலும் அதற்காக என்னை தயார்ப்படுத்தியாக வேண்டும்.

தென்னாபிரிக்க அணியை பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் அணியில் பல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனுபவத்தை பெற்றுவிட்டால், அனைவரும் எதிர்நோக்கும் தென்னாபிரிக்க அணியை பார்க்கலாம். மக்கள் எங்களிடம் அதிகமாக எதிர்பார்த்தனர், ஆனால் இந்த உலகக் கிண்ணத் தொடர் முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன் – என்றார்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!