உலக சாதனைப் படைத்தார் ரோகித் சர்மா: ஒரே உலகக் கிண்ணத் தொடரில் 5 சதங்கள் அடித்து

ஹெடிங்லேயில் இலங்கைக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் சதமெடுத்ததன் மூலம் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரே உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார். இந்த அசாதாரண சாதனையில் அவர் சங்கக்காராவின் 2015 உலகக் கிண்ணத் தொடரின் 4 சதங்கள் சாதனையை உடைத்தார்.

ரோகித் சர்மா 92 பந்துகளில் 102 ஓட்டங்களை எடுத்த போது இந்த அரிய உலக சாதனையை நிகழ்த்தினார். கடந்த சதத்தின் போது சங்கக்காரா சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா. ஹிட்மேன் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் சர்மா 92 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ஓட்டங்களை எடுத்த போது சாதனையை நிகழ்த்தினார்.

இன்னிங்சின் 29வது ஓவரை ரஜிதா வீச ஷோர்ட் பிட்ச் பந்தை ரோகித் தனது வழமையான ஷோட் ஆன புல் ஷோட்டில் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு விரட்டி சதம் கண்டார். இந்த ஷோட்டை அவரால் மறக்க முடியாது, காரணம் உலக சாதனை ஷோட்டாக அது அமைந்தது.

அதே போல் இந்திய அணி செய்த இன்னொரு உலகக் கிண்ண சாதனையிலும் ரோகித் சர்மா உள்ளார், அதாவது ஒரே உலகக் கிண்ணத் தொடரில் முதல் விக்கெட்டுக்காக 4 சதக் கூட்டணி அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடுத்தடுத்து எடுத்ததிலும் ரோகித் சர்மா பெரிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் வீரர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசனைக் கடந்தார்.

ரஜிதா பந்தில் 103 ஓட்டங்கள் எடுத்து ரோகித் சர்மா மத்யூஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!