இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் மழையால் தடைப்பட்டது – நாளை தொடரும் என அறிவிப்பு

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழை காரணமாக இன்று இடைநிறுத்தப்பட்டது. எனினும் ஆட்டம் நாளை தொடர்ந்து இடம்பெறும் என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களையிழந்து 211 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் மழை காரணமாகத் தடைப்பட்டது. அதனால் நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியதும் இந்திய அணி தனது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமான முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்திக்கிறது.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் எடுத்த போது பலத்த மழை வர போட்டி நிறுத்தப்பட்டது. இன்றைய முதல் நாள் ஆட்டம் 4 மணிநேரத்துக்கு மேலாக தடைப்பட்டதால் முதல்நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

நொக் அவுட் சுற்று போட்டிகளுக்கு மேலதிக நாள் உள்ளது. அதனடிப்படையில் நாளை ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை தினமும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் லீக் சுற்று ஆட்டங்களில் அதிக போட்டிகளில் வெற்றிபெற்ற அணியான இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!