நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் 147 அப்பாவி மக்கள் படுகாலையின் 24ஆவது நினைவேந்தல்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் புக்கார விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப் பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய முற்பகல் திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!