பூஜித், ஹேமசிறி பிணையில் விடுவிப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற அனுமதி உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரும் தலா ஐந்து இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்லவே நீதிவான் லங்கா ஜயரட்ண கட்டளையிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் இருவரும் கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய சட்ட மா அதிபரால் வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் எதிராக இந்த குற்றவியல் வழக்கு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!