அரையிறுதியில் இந்தியா தோல்வி – இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

உலகக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பிய நிலையில் இந்திய அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களையிழந்து 239 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
240 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது. ரோகித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல் தலா 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

தலா 32 ஓட்டங்கள் விளாசிய பன்ட், பாண்ட்யா பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து தோனியுடன் கூட்டணி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 3 பவுண்டரி உதவியுடன் 38 பந்தில் அரைசதம் விளாசினார்.

ஜடேஜா, 59 பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தோனியும் 50 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 49 .3 ஓவரில் 221 ஓட்டங்களை மாத்திரமெடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!