சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று (10) புதன்கிழமை 44 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றனர்.

அதில் அதிக மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர். 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் பாடசாலை உணவகத்திலும், மற்றும் பாடசாலையினாலும் சில வகுப்பு மாணவர்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

திடீரென மாணவர்கள் பலரும் வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்தி வரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உணவருந்திய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் எதனால் இந்த பாதிப்பு வந்தது என்பதை இன்னும் சரியாக கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலய தெரிவிக்கின்றது.

பாடசாலை உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் சாய்ந்தமருது பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்று கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சந்தித்து பேசியபோது அதிகமான மாணவர்கள் தாம் நூடில்ஸ் மற்றும் உளுந்துவடை சாப்பிட்ட பின்னரே இந்த நிலை எமக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!