மாங்குளம் விபத்தில் இருவர் உயிரிழப்பு

மாங்குளம்- மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளம் வடகாடு பகுதியில் இன்றிரவு இந்த விபத்து இடம்பெற்றது.

மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி சென்ற டாடா பிக் கப் வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துள்ளாகியது. அதில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தார்.

மல்லாவி பாலிநகரைச் சேர்ந்த ஜே.தினேஷ்குமார் (வயது -17) கே.திசாந்தன் (வயது -18) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். அவர்கள் இருவருமே வாகனத்தில் பயணித்தனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!