அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு – கூட்டமைப்பு எதிராக வாக்களிப்பு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். அதனால் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகள் அளிக்கப்பட்டன.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணைப்பு மற்று ஜேவிபி என்பன வாக்களித்தன. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகள் அளிக்கப்பட்டன.

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை தடுக்க தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜேவிபி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது நேற்றும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!