அரசைக் காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு; ஆனால் வேறு வழியில்லை – சம்பந்தன் எம்.பி. சபையில் தெரிவிப்பு

“ஐக்கிய தேசி முன்னணி அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.திருகோணமலையிலுள்ள எனது இல்லத்துக்கு முன்பாக இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்”

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஐக்கிய தேசிய முன்னணி அரசு கடந்த அரசைவிட கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின் போது இருந்ததைவிட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம். எனவே நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

இன்று திருகோணமலையிலுள்ள எனது இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை . இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக எதனை முன்வைக்கப் போகிறார்கள் என்பதை முதலில் கூறவேண்டும். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம் – என்றார்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!