ஆஸியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து – 2019 உலகக் கிண்ணம் வரலாறு படைக்கிறது

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னெறியது.

இதுவரை உலகக் கிண்ணத்தை கைப்பற்றாத நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதனால் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இரு அணிகளில் ஒன்று வெற்றி பெற்றாலும் வரலாறு படைக்கும்.

உலகக் கிண்ணத் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்றது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்ய முடிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் 9 (11) ஓட்டங்களும் வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டீவன் சிமித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார்.

பின்னர் வந்த அலெக்ஸ் கரே தாடை அடிபட்டாலும் காயத்துடன் 46 (70) ஓட்டங்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்தவர்களில் மக்ஸ்வெல் 22 (23) ஓட்டங்களுடனும் மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் 29 (36) ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

48வது ஓவர் வரை போராடிய சிமித் 85 (119) ஓட்டங்கள் குவித்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 223 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஹித் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாசன் ரோய் மற்றும் பேரிஸ்டோவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 34 (43) ஓட்டங்களில் பேரிஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ரோய் ஆகியோர் அதிரடி காட்டினர். 65 பந்துகளில் 85 ஓட்டங்கள் குவித்து ரோய் ஆட்டமிழந்தார்.

அடுத்து அணித்தலைவர் மோர்கன் ரூட்டுடன் கைகோர்த்தார். இந்த ஜோடியின் விளாசலில் 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எளிமையாக எட்டியது. ரூட் 49 (46) மற்றும் மோர்கன் 45 (39) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!