சிற்றுண்டிச் சாலைகள் மீது சுகாதாரத் துறை அக்கறை செலுத்தாது ஏன்?

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகளில் இடம்பெறும் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பில் பொதுச் சுகாதாரத் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை.

குறிப்பாக சிற்றுண்டிச்சாலை பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ளனரா, நடத்துனர்களிடம் மருத்துவச் சான்றிதழ் உள்ளதா? உள்ளிட்ட விடயங்களில் பொதுச் சுகாதாரத் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை.

சில அரச நிறுவனங்களில் அங்கு பணியாற்றுபவர்களிடமே சிற்றுண்டிச்சாலையை நடத்தும் உரிமையை திணைகளத் தலைவர்கள்  வழங்குகின்றனர். அவ்வாறான சிற்றுண்டிச் சாலைகளில் பொதுச் சுகாதாரத் துறையினர் தலையீடு செய்ய விரும்புவதில்லை என்ற நிலையும் காணப்படுகின்றது.

நீதிமன்றங்களில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முற்றுமுழுதாகக் கவனிப்பதில்லை என்று 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நடந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தொடுத்த வழக்கு ஒன்றில் நீதிவான் பொது விடயமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

கல்முனை சாய்ந்தமருது பாடசாலை ஒன்றில் இயங்கும் சிற்றுண்டிச் சாலையில் நேற்று (ஜூலை 10) உணவருந்திய 44 மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

மாணவர்கள் பாதிகப்பட்ட பின்னரே அந்தச் சிற்றுண்டிச் சாலையின் சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பொதுச் சுகாதாரத் துறையினர் தலையீடு செய்தனர்.

எனவே அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகள் தொடர்பில் பொதுச் சுகாதாரத் துறையினர் கவனம் செலுத்தவேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

என்.சயந்தன்

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!