வடமாகாண நிர்வாகத்தில் மேலும் இரு செயலாளர்களுக்கு மாற்றம்

வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் மேலும் இரண்டு செயலாளர்களுக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக திருமதி ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு , உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர் .வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின்னர், ஜூலை முதலாம் திகதி தொடக்கம் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மேலும் இரண்டு செயலாளர்களுக்கான மாற்றம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!