சாதித்தார் தர்ஜினி; இலங்கை வலைபந்தாட்ட அணிக்கு முதல் வெற்றி

0

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் சிங்கப்பூர் அணியை 50 -88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தது.

15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெறைகிறது. இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா, வட அயர்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சிம்பாவே அணியுடனான முதல் போட்டியிலும் வட அயர்லாந்துடனான இரண்டாவது போட்டியிலும் நடப்புச் சம்பியனுடான மூன்றாவது போட்டியிலும் இலங்கை வலைபந்தாட்ட அணி தோல்வி கண்டது.

இந்த நிலையில் சிங்கப்பூர் அணியும் இலங்கை அணி இன்று திங்கட்கிழமை (ஜூலை 15) மோதின.

முதலாவது கால் மணி நேர ஆட்டப் இலங்கை அணி 21 க்கு 11 என முன்னிலை பெற்றது. இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை அணி 24க்கு 11 என்று முன்னிலை பெறும் வாய்ப்பு கிடைத்தது.
மூன்றாவது ஆட்டநேர பகுதியியையும் இலங்கை அணி 26 க்கு 14 என தனதாக்கிக்கொண்டது.

கடைசி ஆட்ட நேர பகுதியையும் இலங்கை வீராங்கனைகள் தமதாக்கிக் கொண்டதனால் இலங்கை அணி 17க்கு 14 என தனதாக்கி போட்டியில் 80க்கு 50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இதில் வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் (shooter) வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், 76/78 கோல்களைப் போட்டு இந்த உலகக் கிண்ணத் தொடரில் தனிப்பட்ட சாதனையைப் படைத்தார்.

அத்துடன், எழிலேந்தினி சேதுகாலவர் 6/7 கோல்கலைப் போட்டு சாதித்தார்.