மகேலவின் சாதனையை முறியடித்தார் வில்லியம்ஸன்

0

நியூசிலாந்தின் வில்லியம்சன், ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த அணித்தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தனவின் 12 ஆண்டுகள் சாதனையை முறியடித்தார்

நியூசிலாந்தின் வில்லியம்சன், இம்முறை விளையாடிய 10 போட்டிகளில், 2 சதம், 2 அரைசதம் உள்பட 578 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த அணித்தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இதற்கு முன், 2007ஆம் நடந்த உலகக் கிண்ணத் தொடரிலர் இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்தன, 548 ஓட்டங்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட வில்லியம்சன், தொடர் நாயகன் விருது வென்றார்.

கப்தில் ஏமாற்றம்

2015ஆம் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய 9 போட்டிகளில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 547 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்தின் மார்டின் கப்தில், அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

ஆனால் இம்முறை துடுப்பாட்டத்தில் சொதப்பிய இவர், 10 போட்டியில், ஒரு அரைசதம் உள்பட 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். கடந்த முறை இவர், ஒரு இன்னிங்சில் 237 ஓட்டங்கள் குவித்தார்.

ஆர்ச்சர் ‘20’
வேகப்பந்துவீச்சில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர், 11 போட்டியில், 20 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அடுத்த நான்கு இடங்களில் முறையே மார்க் வூட் (18 விக்கெட், 2019), வோக்ஸ் (16 விக்கெட்டுக்கள், 2019), இயான் பொத்தம் (16 விக்கெட்டுக்கள், 1992), ஆன்ட்ரூ பிளிண்டொப் (14 விக்கெட்டுக்கள், 2007) ஆகியோர் உள்ளனர்.