ஐசிசி தரப்படுத்தலில் இங்கிலாந்து முதலிடம் – இலங்கை எட்டாமிடம்

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கு தரப் பட்டியலில் அணிகள், துடுப்பாட்ட வீரர்கள்,பந்து வீச்சாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

12ஆவது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்தப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 125 புள்ளிகளைப் பெற்ற உலக சம்பியன் இங்கிலாந்து அணி, இந்திய அணியைப் பின் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 8ஆவது பின் சென்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ராவும் தொடர்ந்து முதலாவது இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் அணிப் பட்டியில்

 1. இங்கிலாந்து – 125
 2. இந்தியா – 122
 3. நியூஸிலாந்து – 122
 4. அவுஸ்திரேலியா – 111
 5. தென்னாபிரிக்கா – 110
 6. பாகிஸ்தான் – 97
 7. பங்களாதேஷ் – 90
 8. இலங்கை – 79
 9. மேற்கிந்தியத்தீவுகள் – 77
 10. ஆப்கானிஸ்தான் – 59

ஒருநாள் துடுப்பாட்ட வீரர் பட்டியல்

 1. விராட் கோலி – 886
 2. ரோகித் சர்மா – 881
 3. பாபர் அசாம் – 827
 4. டூப்பிளஸ்ஸி – 820
 5. ரோஸ் டெய்லர் – 817
 6. கேன் வில்லியம்சன் – 796
 7. டேவிட் வோர்னர் – 794
 8. ஜோ ரூட் – 787
 9. குயின்டன் டீகொக் – 781
 10. ஜெசன் ரோய் – 774

ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியல்

 1. பும்ரா – 740
 2. டிரெண்ட் போல்ட் – 740
 3. கெகிஷோ ரபடா – 694
 4. பேட் கம்மின்ஸ் – 693
 5. இம்ரான் தாகீர் – 683
 6. முஜிபர் ரங்மான் – 681
 7. கிறிஸ் வோக்ஸ் – 676
 8. மிட்செல் ஸ்டாக் – 663
 9. ரஷித் கான் – 658
 10. மாட் ஹென்றி – 656

ஒருநாள் சலகதுறை ஆட்டக்காரர்கள் பட்டியல்

 1. சஹிப் அல்ஹசன் – 406
 2. பென்ஸ்டோக் – 319
 3. மொஹமட் நபி – 310
 4. இமாட் வஸிம் – 299
 5. ரஷித் கான் – 288
 6. கிறிஸ் வோக்ஸ் – 267
 7. ஜோசன் ஹொல்டர் – 264
 8. மிட்செல் சாண்டனர் – 260
 9. அண்டில் பெகுல்வேயோ – 257
 10. ஹர்த்திக் பாண்டியா – 253
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!