இலங்கையில் கால் பதிக்கிறது சீன எண்ணெய் நிறுவனம்

0
CHINA - FEBRUARY 23: A Sinopec gas station stands in front of a Sinopec oil refinery in Pudong district, Shanghai, China, on February 23, 2006. China Petroleum & Chemical Corp., Asia's biggest refiner, increased oil processing at the slowest pace in four years in 2006 as record crude prices pushed up raw material costs. (Photo by Kevin Lee/Bloomberg via Getty Images)

சினோபெக் (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், இலங்கையில் எரிபொருள் விநியோக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பியூஎல் ஒயில் சிறிலங்கா கம்பனி லிமிட்டட் (Fuel Oil Sri Lanka Co Ltd) என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.

இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.