எமது பாதுகாப்புக்கு ஆயுதம் தூக்கத் தயார் ; பிரதமர் முன் நிரூபித்தனர் மாணவர்கள் – சித்தார்த்தன் எம்.பியின் விளக்கம் இது

“எமது பாதுகாப்புக்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாணவர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகைதந்தார். அவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவிலும் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த பிரதமருக்கு கல்லூரி மாணவர்களின் கடேற் பிரிவினரின் (ஆயுதம் தாங்கிய மாணவ சிப்பாய்கள்) வரவேற்பு அணிவகுப்பு இடம்பெற்றது.

“கடேற் மாணவர் படைப் பிரிவு என்பது இலங்கை முழுவதும் உண்டு. அது யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் உண்டு. இதே கல்லூரியிலும் உண்டு.

இந்த பிரிவினரே பிரதமரின் வரவேற்பு அணிநடையில் பயன் படுத்தப்பட்டனர். இங்கே பிரதமரிற்கு ஓர் செய்தி சொல்லப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாணவர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!