ஒரு கப் ‘டீ’யின் விலை ரூபா 35,000; அப்படி என்னதான் ஸ்பெஷல்?

பிரிட்டனின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள ஒரு உணவ‌கத்தில் ஒரு கோப்பை தேநீர் சுமார் 35 ஆயிரம் ரூபாவுக்கு ( 160 பவுண்ட்) விற்பனை‌ செய்யப்படுகிறது.

வெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு சூடாக டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது. இன்னும் சிலருக்கு காலையில் எழுந்தவுடனே டீ குடித்தால்தான் அன்றைய தினமே முழுமை பெறும். அந்த அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.

ஆனால், ஒரு கோப்பை தேநீர் 35 ஆயிரம் ரூபாய் என்றால் டீ பிரியர்கள் சற்று அதிர்ச்சிக்குத்தான் உள்ளாவார்கள். பிரிட்டனின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள ஒரு உணவ‌கத்தில் ஒரு கோப்பை தேநீர் 35 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை‌ செய்யப்படுகிறது.

லண்டனில்‌ உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள தி ரூபென்ஸ் என்ற உணவகத்தில் ஒரு கோப்பை தேநீர் ‌‌200 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகத்திற்கு‌‌‌ வரும் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளைக் குடுவையில் தேநீர் பரிமாறப்படுகிறது.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரத்யேக தேயிலையால் உருவாக்கப்படும் இந்த தேநீர் உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாப்‌ பயணி‌களையும் வெகுவாக‌ கவர்ந்துள்‌ளது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!