தெற்கில் மழை; களு கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு – மக்களுக்கு எச்சரிக்கை

0

களு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் களுகங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வதன் காரணமாக அதனையண்டிய இரத்தினபுரி, எலபாத, கிரியெல்ல மற்றும் ஆயகம பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்று தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், திருகோணமலை மாவட்டம், மேல், மத்திய, சப்ரமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதோடு ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. நாட்டின் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் சற்றும் தாமதமாக பயணிக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.