யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் கேபிள் ரீவி சேவை துண்டிப்பு

0

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனம் ஒன்றின் கேபிள்கள் தேசிய அரசியல் கட்சி சார்ந்தவரின் குழுவால் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கான கேபிள் இணைப்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி மற்றும் காங்கேசன் துறை வீதி ஆகியற்றில் மின் கம்பங்கள் ஊடாகச் சென்ற கேபிள்களே நேற்று இரவு அறுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் அஸ்க் மீடிய (Ask Media) நிறுவனத்தின் கேபிள்கள் நேற்று புதன்கிழமை இரவு கும்பல் ஒன்றால் அறுக்கப்பட்டுள்ளன. ரிப்பர் வாகனத்தில் சென்ற கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது என்று கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.

தேசியக் கட்சி ஒன்றின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரால் நடத்தப்படும் கேபிள் நிறுவனத்துக்கு கம்பம் நடுவதற்கு உள்ளூராட்சி சபைகளின் அனுமதி கட்டாயம் என்ற நிலையால் போட்டி நிறுவனத்தின் கேபிள்களை அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.